தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய அட்டவணை வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வு நடக்கும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மற்றும் பொது இடமாறுதலுக்கான கலந்தாய்வு பிப்.16 முதல் மார்ச் 7-ம் தேதிவரை நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய கலந்தாய்வு கால அட்டவணையை தொடக்கக் கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி நேற்று வெளியிட்டார்.

அதன்படி, பிப்.16, 17-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

கலந்தாய்வு தேதிகள் மாற்றம்

பிப்.25-ல் நடப்பதாக இருந்த கலந்தாய்வு 24-ம் தேதிக்கும், மார்ச் 4-ம் தேதி கலந்தாய்வு பிப்.25-ம் தேதிக்கும், மார்ச் 5-ம் தேதி கலந்தாய்வு பிப். 28-ம் தேதிக்கும், மார்ச் 7-ம் தேதி கலந்தாய்வு மார்ச் 2-ம் தேதிக்கும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்விஅதிகாரிகள், வட்டாரக் கல்விஅதிகாரிகளுக்கும் இதுகுறித்ததகவல் அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்