சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதயமேரி பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். பள்ளி விடுதி அறையை சுத்தம் செய்யச் சொல்லிவார்டன் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி வார்டன் சகாய மேரியை போலீஸார் கைதுசெய்தனர். தேசிய குழந்தைகள்உரிமை பாதுகாப்பு ஆணையக் குழுவினர் தஞ்சாவூருக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, தனது மகள் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பீலா திரிவேதிஅமர்வில் இந்த மேல் முறையீட்டுமனு 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுதரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, பி.வில்சன் ஆஜராகி, ‘‘மாணவியின் தற்கொலை வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. மாநில போலீஸார் விசாரணை நடத்த அவகாசம் வழங்கப்படவில்லை. சிபிஐ விசாரணைக்கு மாற்றிய முறையும் சரியல்ல. எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரினர்.
அதற்கு நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் முதல்கட்டமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி சிபிஐ போலீஸாரே விசாரணைநடத்தட்டும். அதே நேரம், தமிழகஅரசு தொடர்ந்துள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கில் மாணவியின் தந்தை முருகானந்தம் 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட மூத்தவழக்கறிஞர் வில்சன், “சிபிசிஐடி விசாரணை கோரிதான் வழக்குதொடரப்பட்டது. விசாரணையின்போது வழக்கறிஞர் சிபிஐ விசாரணை கோரியதால், அதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தவறானது. எனவே, இடைக்கால தடைவிதிக்க வேண்டும்” என மீண்டும் கோரினார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,“இதை தமிழக அரசு கவுரவ பிரச்சினையாக பார்க்க வேண்டாம். சிபிஐ விசாரணையை தொடங்கட்டும். மாணவியின் தந்தை பதில்அளித்த பிறகு அடுத்த கட்டமாகவிசாரிக்கலாம்’’ என்று கூறிவழக்கை 3 வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர். இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரிபள்ளி நிர்வாகமான தூய இருதயமேரி சபை தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், மாணவி தற்கொலை தொடர்பாக சிபிஐ முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. 305 - குழந்தைகளை தற்கொலை செய்ய தூண்டுதல், 511- குற்றம் செய்ய முயற்சித்தல், சிறார் நீதி சட்டப்பிரிவுகளான 75, 82(1) ஆகிய பிரிவுகளில் தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதி வார்டன் சகாய மேரி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago