தொடக்கப் பள்ளிக்கு 10 சென்ட் நிலத்தை தானமாக அளித்த அரசு மருத்துவர்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் நமச்சிவாயபுரம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 1962-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு புதிய பள்ளிக் கட்டிடத்தை கட்ட ஊராட்சி நிர்வாகம் முயற்சித்து வந்தது. ஆனால், அதற்கு போதிய இடம் இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், நமச்சிவாயபுரத்தை பூர்வீகமாக கொண்ட, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்துவரும் ஜெகதீஷ்குமார், பள்ளி அருகே உள்ள தன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் நிலத்தை, பள்ளிக்குதானமாக அளிக்க முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று ஜெகதீஷ்குமார், பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் மற்றும் ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களில் கையெழுத்திட்டு அரசுக்கு தனது நிலத்தை ஒப்படைத்தார். மருத்துவர் ஜெகதீஷ்குமாரை பொதுமக்கள் பாராட்டி மகிழ்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்