சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பபாசி-யின் 45-வதுசென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (16-ம் தேதி) முதல் மார்ச் 6-ம் தேதி வரை தொடர்ந்து 19 நாட்கள் நடக்க இருக்கிறது.
இதன் தொடக்கவிழா இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புத்தகக் காட்சியை திறந்துவைத்து பார்வையிடுகிறார். பின்னர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, பபாசிதலைவர் எஸ்.வயிரவன், துணைத்தலைவர் பெ.மயிலவேலன், செயலர் எஸ்.கே.முருகன், பொருளாளர் எஸ்.குமரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
புத்தகக் காட்சியில் 800 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. 10 லட்சம்தலைப்புகளில் 500-க்கும் மேற்பட்டபதிப்பகங்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தினமும் காலை 11 முதல் இரவு 8 மணிவரை புத்தகக் காட்சி செயல்படும்.தினமும் மாலை கருத்தரங்கு, கவியரங்கங்கள் நடக்க உள்ளன.
புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.10-ம், சீசன் டிக்கெட் ரூ.100 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் இல்லம் தேடிகல்வி அரங்கம் மற்றும் சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை அரங்குகளும் இடம்பெறுகின்றன. சுகாதாரமான, விலை மலிவான உணவுக்கூடம், குடிநீர், கழிப்பறை, ஓய்வெடுப்பதற்கான இட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago