மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் மேயர் வேட் பாளர் யார் என அறிவிப்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தபோது, அக்கட்சி யில் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதில் அப்போது அமைச்சராக இருந்த செல்லூர் கே.ராஜூ மற்றும் ராஜன்செல்லப்பா தரப்பினரிடையே போட்டி ஏற்பட்டது.
இந்நிலையில் அப்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிமுகவில் இந்த இருவர் தரப்பிலும் மேயர் பதவிக்கான கவுன்சிலர் வேட்பாளர்களாக யாரையும் முன்னிறுத்தவில்லை. அவர்களை பின்பற்றி அடுத்தக் கட்ட நிர்வாகிகளும் ஒதுங்கிக் கொண்டனர்.
அதனால், 100 வார்டுகளில் நடக்கும் தேர்தலில் மேயராக யாரை முன்னிறுத்துவது என்பதில் முடிவு எடுக்க முடியாமல் அக்கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், அதிமுகவுக்கு மாநக ராட்சி தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தால் சண்முகவள்ளி, சுகந்தி அசோக், சண்முகப்பிரியா ஹோசிமின் ஆகியோரில் ஒருவருக்கே மேயர் பதவியை பெற வாய்ப்பு கிடைக்கும் என அக்கட்சியினர் கூறுகின்றனர். இவர்களில் சண்முகவள்ளி மண்டலத்தலைவராக இருந் தவர். சுகந்தி கவுன்சிலராக வெற்றிபெற்று மாநகராட்சியில் கல்வி குழுத் தலைவராக இருந் தவர்.
முன்னாள் கவுன்சிலர் சண் முகப்பிரியா ஹோசிமின், கட்சியின் மகளிரணியில் இருப்பவர். இவர்கள் மூவரும் செல்லூர் கே.ராஜூவின் ஆதரவாளர்கள். இதனிடையே ராஜன் செல்லப்பா தரப்பினரோ, புறநகர் கிழக்கு மாவட்டத்தில் 29 வார்டுகள் மட்டுமே வருவதால் மேயர் வேட்பாளர் யார் என முடிவு செய்வதை செல்லூர் கே.ராஜூவுக்கு பெருந் தன்மையுடன் விட்டுக்கொடுத்து விட்டதாகக் கூறி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago