கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளதால், மாணவிகளுக்கு அங்குள்ள தனியார் மண்டபத்தில் வைத்து பாடங்கள் நடத்தப்படுகின்றன. இடநெருக்கடியான இடத்தில் மாணவிகள் அமர்ந்துபாடம் கற்பதால் கரோனா பரவும்அபாயம் நிலவுவதாக பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்.19-ம்தேதி நடக்கிறது. இதற்கான வாக்குஎண்ணும் மையம் கோவில்பட்டிஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் உள்ள 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவிகளை அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அமர வைத்து பாடம் நடத்துகின்றனர்.
6, 7, 8 வகுப்புகளில் 13 பிரிவுகள், 9-ம் வகுப்பில் 10 பிரிவுகள் என மொத்தம் 23 பிரிவுகளில் சுமார் 600 மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து பாட கற்பிப்பது இயலாத ஒன்றாகும்.
ஆனால், எந்தவித முன்னேற்பாடும் இல்லாத நிலையில்,மாணவிகள் நேற்று முதல்தனியார் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கரும்பலகை மற்றும் தனித்தனி அறைகள் இல்லை. அனைவரும் அருகருகே நெருக்கியபடி அமர்ந்துள்ளதால் கரோனா பரவும் அபாயம் நிலவுவதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், 5 கழிப்பிடங்கள் மட்டுமே இருப்பதால், மாணவிகள் மிகவும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
மாணவிகளுக்கு பாடம்நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்று மதியம் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவிகளுக்கு பாடம் நடத்தப்படும் தனியார் மண்டபம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, ‘‘பள்ளியில் 2,100 மாணவிகள் படித்து வரும் நிலையில், இதற்கு ஏற்ப சரியான மாற்று இடத்தை தயார் செய்யாமல் எப்படிபள்ளியை வாக்கு எண்ணும் மையமாக மாற்ற அனுமதித்தனர் எனதெரியவில்லை. இதற்கு உடனடியாக அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘ கோவில்பட்டியில் உள்ளகல்லூரிகளில் பெரிய கலையரங்கங்கள் உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு அவற்றை பயன்படுத்தி இருந்தால், மாணவிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்காது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago