திருநங்கைகளுக்கு விடுதி: சென்னையில் விரைவில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் உரையின்போது திருநங்கைகளுக் கான விடுதி சென்னையில் அமைக் கப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. அதைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கான இடைக் கால விடுதியை அண்ணா நகர் மண்டலத்தில் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த விடுதியை பராமரிக்கும் பணி, நூரி என்ற திருநங்கை தலைவராக இருக்கும் எஸ்.ஐ.பி (சவுத் இந்தியன் பாசிடிவ் நெட்வர்க்) என்ற தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கெனவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தை நடத்தி வருகிறது.

இது குறித்து நூரி கூறுகையில், “ஆதரவற்ற, வீடற்ற திருநங்கைகள் ரயில் நிலையங்களிலும் தெரு வோரங்களிலும் உள்ளனர். அவர் களை ஒரு குழுவின் மூலம் கண் டறிந்து, இந்த இடைக்கால விடுதிக்கு கொண்டு வருவோம். இங்கு அவர்களுக்கு தேவையான மன ரீதியான கவுன்சிலிங் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகி யவை ஒரு மாதத்துக்கு வழங்கப் படும். அதன் பிறகு அவர்கள் வேறு இல்லங்களுக்கோ, வேலைக்கோ அனுப்பப்படுவர்,” என்றார்.

இதே அமைப்பில் இருக்கும் மற்றொரு திருநங்கை என்.ஜெய தேவி கூறுகையில், “ஒரு மாதத் துக்கு பிறகும், ஆதரவு தேவைப் படும் திருநங்கைகளுக்கு உதவி செய்வோம்,”என்றார்.

இடைக்கால விடுதி அமைக்க ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் அம்மா உணவகம் கட்டப் பட உள்ளது. எனவே, தற்போது வேறு இடத்தை தருமாறு அவர்கள் மேயர் சைதை துரைசாமியிடம் மனு கொடுத்துள்ளனர். அதைப் பெற்றுக் கொண்ட மேயர், விரைவில் இடங்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்