பள்ளி மாணவி மரணத்தை சிபிஐ விசாரிக்கும்; உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி மாணவி மரணத்தை சிபிஐ விசாரிக்கும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைசெய்த விவகாரத்தில் பாஜக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் காரணமாக இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள் ளது.

தமிழக அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கும் இந்த தீர்ப்பு, நீதிக்கு கிடைத்த வெற்றி. இது பாஜகவின் தொடர்அறப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இனியாவது தமிழக அரசு, தான் சொன்ன பொய்களுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்குமா? மகளை இழந்து தவிக்கும் பெற்றோரை மாவட்ட ஆட்சித் தலைவர் இனியாவது சந்திக்கச் செல்வாரா? உயிரிழந்த மாணவியின் பெற் றோரை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவாரா?

ஆளும் அரசும் அதிகாரிகளும் அடுக்காக சொன்ன பொய்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிச்சப்படுத்துகிறது. பாஜக நேர்மையின் பக்கம், மக்களின் பக்கம், நியாயத்தின் பக்கம் இருப்பதை இந்த தீர்ப்புஉறுதி செய்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்