திண்டுக்கல் மாநகராட்சியில் தேர்தல் முடிவுக்கு பிறகே திமுக மேயர் வேட்பாளர் தேர்வு

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாநகராட்சி தேர்தல் முடிவுக்குப் பிறகே மேயர் வேட்பாளரைத் தேர்வு செய்ய திமுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகராட்சி, மாநகராட் சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. ஏற்கெனவே நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவை சேர்ந்த மருதராஜ் மேயராக அறிவிக்கப்பட்டு செயல் பட்டு வந்தார். இதனால் முதன் முதலாக தேர்தலை சந்தித்து மேய ராவது தற்போதைய தேர்தல் மூலம்தான்.

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது. அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராக 11-வது வார்டில் போட்டியிடும் பொன்முத்து முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், திமுக சார்பில் மேயர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகே தெரிய வரும் எனக் கட்சியினர் தெரிவித்தனர். திண்டுக்கல் மாநகராட்சியில் திமுக சார்பில் 38 பேர் போட்டியி டுகின்றனர். இதில் பெண் வேட்பாளர்கள் 20 பேர் களத்தில் உள்ளனர். திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் பெண் வேட்பாளர்களில் ஒருவர் மேயராக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், 3-வது வார்டில் போட்டியிடும் வி.இந்திராணி, 6-வது வார்டில் போட்டியிடும் ஒ.சரண்யா ஆகியோர் மேயர் வேட்பாளர் போட்டியில் முன்னி லையில் உள்ளதாகக் கட்சியினர் தெரிவித்தனர். இருவரும் அரசி யலுக்குப் புதிது. இருப்பினும் வலுவான வேட்பாளர்களாக உள் ளனர். இருந்தபோதும், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கை காட்டுபவரே மேயராக வாய்ப் புள்ளது.

பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றினால், அதன் பிறகு கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் பெண் வேட்பாளர்களில் ஒருவரை மேயர் வேட்பாளராக அறிவிக்கலாம் எனக் கூறி திமுக நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE