புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் இழுத்து செல்லப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை உடனடியாக மீட்டு கரை சேர்ந்த காவலரை பலரும் பாராட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் விஷ்ணு (22), சபரிஷ் (24). இவர்கள் தங்கள் நண்பர்கள் உடன் புதுச்சேரியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலகம் எதிரே உள்ள புதுச்சேரி கடற்கரையில் தங்கள் நண்பர்களுடன் இன்று குளித்து கொண்டிருந்தனர். மணல் பரப்பில் நண்பர்களுடன் குளித்தபோது, வேகமாக வந்த அலையொன்று சபரிஷை இழுத்துச் சென்றுள்ளது. இதனை கண்ட விஷ்ணு அவரை காப்பாற்ற முற்பட்டுள்ளார். ஆனால், கடல் அலை இருவரையும் இழுத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து உடன் வந்திருந்த நண்பர்கள் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர காவல் படை காவலர் சவுந்தரராஜனிடம் தகவலை தெரிவித்துள்ளனர். உடனடியாக கடலில் குதித்த காவலர், தத்தளித்துக் கொண்டிருந்த இருவரையும் மீனவர்கள் உதவியுடன் மீட்டு கரை சேர்த்துள்ளார். இளைஞர்கள் இருவரும் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி பெரிய கடை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை துரிதமாக செயல்பட்டுக் காப்பாற்றிய காவலரை பலரும் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago