‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா' சார்பில் ‘சுத்தம் சுகாதாரம்’ சுகாதார விழிப்புணர்வுத் தொடர் நிகழ்வு - ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் காணலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: `டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா' சார்பில் ‘சுத்தம் சுகாதாரம்’ என்ற இணையவழி தொடர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் தொடர்ந்து 5 வாரங்களுக்கு, 5 தலைப்புகள், 15 பகுதிகள் கொண்ட நிகழ்வுகளாக ஒளிபரப்பாக உள்ளது.

வாரம்-1-ல் நோயுற்ற சமயங்களில் நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார செயல்பாடுகள் குறித்து ஒளிபரப்பாகிறது.

பிப்ரவரி 15: முதல் பகுதியில் கரோனா, ஒமைக்ரான் வைரஸ் தொற்றுகளின் தாக்கம், முகக்கவசம் அணிய வேண்டிதன் அவசியம், அனைவரும் சமூக இடைவெளி விட்டு இருப்பதால் உண்டாகும் நன்மைகள்.

பிப்ரவரி 16: வீட்டில் யாரேனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அவரை எவ்விதம் பாதுகாக்க வேண்டும், பயணங்களின்போது நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள்.

பிப்ரவரி 17: பல்வேறு பருவ காலங்களுக் கேற்ப நம்மை எவ்விதம் தற்காத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பருவ காலத்திலும் பரவும் தொற்றுநோய்கள். இயற்கையாய் விளையும் உணவுப் பொருட்களில் நிறைந் துள்ள சத்துகள், அவற்றை உட்கொள்வதனால் விளையும் நன்மைகள்.

பிப்ரவரி 18: வயிற்றுப்போக்கு எதனால் உண்டாகிறது. வயிற்றுப்போக்கு வந்தவருக்கு எவ்வகை உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன? நோய்கள் பரவாத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள்.

இந்த சுகாதார நிகழ்வில், டாக்டர் ராதா லெட்சுமி செந்தில் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ள வீடியோக்களிலிருந்து, ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஒரு கேள்வி கேட்கப்படும்.

பள்ளிகளுக்கு சிறப்புப் பரிசுகள்

எந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் அதிக அளவில் சரியான பதிலைத் தந்து பங்கேற்கிறார்களோ, அந்தப் பள்ளிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-ல் பார்க்கலாம்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நிகழ்வு ஒளிபரப்பாகும் நாளன்று இந்த இணையவழி நிகழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் கேள்வியும் தொடர்ந்து வெளியாக உள்ளது. அந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-ல் கேட்கப்பட்டுள்ள தகவல்களுடன் பூர்த்தி செய்து அனுப்பலாம். மேலும், சந்தேகங்கள், கேள்விகளையும் சேர்த்து அனுப்பிவைக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்