சிவகங்கை: 5 ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர் பேசியது: நானும் பணம் புழங்கக்கூடிய துறையில் அமைச்சராக இருந்துள்ளேன். நிர்வாகத்திடம் பணம் இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். மக்களுக்கு செய்ய வேண்டும் என மனம் இருந்தால்போதும்.
அதிகாரிகள் மட்டும் இருந்தால் பணம் இல்லை என்று தான் கூறுவார்கள். அதே இடத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தால், அந்த காரியத்தை செய்து விடுவார்கள். திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 5 ஆண்டுகளாக நடத்தப்படாத நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தியுள்ளனர். அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். அதேபோல் பல வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். மேலும் 5 ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். கவுன்சிலர்களாக வெற்றி பெற்றதும் அலுவலகம் அமைத்து மக்களை சந்திக்க வேண்டும். மக்களை வீட்டுக்கு வரச்சொல்லி அலையவிடக் கூடாது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago