மதுரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டி யிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்.14) மாலை 5 மணிக்கு காணொலி மூலம் பிரச்சாரம் செய்கிறார்.
இதுகுறித்து அமைச்சரும், கிழக்கு மாவட்ட திமுக செயலரு மான பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆனையூரில் 5 இடங்களிலும், திருப்பாலையில் 4, கண்ணனேந் தலில் 3, வண்டியூரில் 2, வள் ளாலப்பட்டியில் 5, சோழவந்தான், வாடிப்பட்டியில் தலா 9, அலங்கா நல்லூரில் 5, பாலமேட்டில் 2, மேலூரில் 13 இடங்களிலும் முதல்வரின் காணொலி பிரச்சாரம் ஒளிபரப்பப்படும். இதில் திமுக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், வேட் பாளர்கள் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ.தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் இன்று மாலை 5 மணிக்கு காணொலி மூலம் பிரச்சாரம் செய்கிறார். எல்லீஸ் நகர் பகுதியில் 6 இடங்களிலும், சிம்மக்கல் பகுதியில் 5, ஜீவா நகர் கிழக்கு பகுதியில் 4, ஆனையூர் பகுதியில் 5, ஜீவா நகர் மேற்கு பகுதியில் 5, பழங்காநத்தம் தெற்கில் 6, பழங்காநத்தம் வடக்கு பகுதியில் 5, பரவை பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகளுக்குப் பரவையிலும் முதல்வரின் காணொலி பிரச்சாரம் ஒளிபரப்பப்படும்.
மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையிலும், அமைச்சர் பழனிவேல் தியாகராசன் முன்னிலையிலும் முதல்வர் பிரச்சாரம் செய்கிறார்.
இதில் திமுக நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என கோ.தளபதி தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago