காதலர் தினத்தால் கொய் மலர் விலை அதிகரிப்பு: கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

காதலர் தினத்தை முன்னிட்டு கொய்மலர்கள் விலை அதிகரித்ததால் கொடைக்கானலில் கொய்மலர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் பசுமைக்குடில் அமைத்து கொய்மலர் சாகுபடி பல ஏக்கர் பரப்பில் நடக் கிறது. உயர்ரகப் பூக்களான கார்னேசன், ஜிப்சோப்ரா, சார்ட்டிஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பூச்செடிகளை சாகுபடி செய்து பராமரித்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

பூங்கொத்துகள், அலங்காரம் செய்ய கொய்மலர்கள் பயன்படுகின்றன. காதலர் தினத்தன்று ரோஜா மற்றும் இந்த கொய்மலர்களை காதலர்கள் தங்களது காதலிக்கு பரிசாகக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது வழக்கம்.

இதனால், காதலர் தினத்தை முன்னிட்டு கொய்மலர்களுக்கு கிராக்கி ஏற்படும்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 20 பூக்கள் கொண்ட மலர்க்கொத்து ரூ.100 முதல் ரூ.150 வரை விற்ப‌னையானது. காதலர் தினத்தை முன்னிட்டு விலை அதிகரித்து 20 பூக்கள் கொண்ட மலர்க்கொத்து ரூ.200 முதல் ரூ.300 வரை விற்றது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக காதலர் தினத்தில் மலர்களை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையில் அவை வீணாகிப் பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்தனர். இந்த ஆண்டு அதிக விலைக்கு கொய்மலர்கள் விற்பனையாவது தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, என்கின்றனர் கொய்மலர் சாகுபடி விவசாயிகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்