கழிஞ்சூர் ஏரி தண்ணீர் ஊருக்குள் நுழையாமல் இருக்க கால்வாய் அமைத்து தண்ணீர் வெளியேற்றப்படும்: 12-வது வார்டு திமுக வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி

வேலூர் மாநகராட்சி 12-வது வார்டில் திமுக சார்பில் ஆர்.சரவணன் போட்டியிடுகிறார். இங்கு, மதிநகர், சத்யா நகர், அருப்புமேடு, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. வேலூர் மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுத்தால், அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படும்.

மதிநகர், அருப்புமேடு, கோபாலபுரம், சத்யா நகர் பகுதியில் அனைத்து வீட்டுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும். படித்த இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். நவீன வசதிகள் கொண்ட உடற்பயிற்சி மையம் அமைக்கப்படும். ஏரிக்கரைகள் மீது பூங்கா அமைக்கப்படும். அருப்புமேடு முதல் எம்ஜிஆர் நகர், விஜய் சேல்ஸ் முதல் ஏரிக்கோடி வரை சாலைகள் சீரமைக்கப்படும்.

அருப்புமேட்டில் உள்ள அங்கன்வாடி பள்ளி சீரமைக்கப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்படும். புகார் பெட்டி வைத்து பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்படும். பூங்காக்கள் புதுப்பிக்கப்படும். மழைகாலங்களில் கழிஞ்சூர் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஊருக்குள் நுழையாதவாறு காங்கிரட் கால்வாய் அமைத்து மழைநீர் சீராக வெளியேற்றப்படும். ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்படும்.

முதியோர் ஓய்வூதியம், பெண்களுக்கான திருமண நிதியுதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்று தரப்படும்’’ என தனது தேர்தல் வாக்குறுதிகளாக அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE