ஆம்பூரில் வேலு நாச்சியார் அலங்கார ரதத்துக்கு வரவேற்பு

By செய்திப்பிரிவு

ஆம்பூரில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ரதத்துக்கு மேள தாளங்கள் முழங்க மலர் தூவி உற்சாக வரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது.

சென்னையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் உருவச்சிலை பொருந்திய அலங்கார ரதம் பொதுமக்கள் பார்வைக்காக தமிழகம் முழுவதும் வலம் வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் வந்த அலங்கார ரதத்துக்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும்பாரம்பரிய பறை இசைக்கருவி கள் முழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அ.செ.வில்வநாதன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, மாவட்டஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) வில்சன்ராஜசேகர், ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், நகராட்சிஆணையாளர் ஷகிலா மற்றும்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

50-க்கும் மேற்பட்ட பள்ளிமாணவ, மாணவியர்கள் வேலுநாச்சியார் வேடம் அணிந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.கலை நிகழ்ச்சிகளை நடத்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாணியம்பாடிவருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி பாராட்டு தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்ட எல்லையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் அலங்கார ஊர்திக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரமங்கை வேலு நாச்சாரியின் அலங்கார ஊர்தி வேலூர் மாவட்ட எல்லையான கூத்தம்பாக்கம் தேசியநெடுஞ்சாலை சந்திப்புக்கு நேற்று மாலை வந்தடைந்தது.

இதனைத்தொடர்ந்து, வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் மலர் தூவி அலங்கார ஊர்தியை வரவேற்றனர். இந்த அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்கள், வீரன் சுந்தரலிங்கம், வீரத்தாய் குயிலி, பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகு முத்துக்கோன், காளையர் கோயில், கோட்டை மீது வீரர்கள் ஆங்கிலேயரிடம் சண்டையிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதனை, பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதையடுத்து, அணைக்கட்டு ஒன்றியம், கழனிபாக்கம் ஊராட்சியில் வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி சென்ற டைந்தது. அங்கு பொதுமக்கள் அலங்கார ஊர்தியை கண்டு ரசித்த னர்.

இந்நிகழ்ச்சி யில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம மூர்த்தி, திட்ட இயக்குநர் ஆர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்