சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இலங்கை அட்டூழியங்களை எவ்வளவு வேடிக்கை பார்க்கப்போகிறோம்? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது:
''தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம்?
வெறுமனே கடிதங்களை எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் நினைப்பது கண்டனத்திற்குரியது.
» பிரச்சாரத்தில் திமுக வேட்பாளருக்கு பிரசவ வலி: ஆண் குழந்தை பிறந்தது
» கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 3 திருநங்கைகள் பணி நியமனம்: பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் வரவேற்பு
தனுஷ்கோடி அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்கச் செய்வதுடன், இனிமேலும் இந்த அவலம் தொடராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.''
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago