நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு 2 தகுதித் தேர்வை வைப்பதற்கான காரணம் என்ன என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்வுக்கு மறுப்புத் தெரிவிக்கும் திமுக, ஆசிரியர் பணிக்கு பி.எட். தேர்வு மதிப்பெண் இருந்தும், டெட் தேர்வை நடத்துகிறார்கள். மேலும், டெட் தேர்வில் தேர்வானவர்களுக்கு மீண்டும் ஒரு முறை தகுதித் தேர்வு நடத்துகிறார்கள்.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவிக்கும் திமுக, 2 டெட் தேர்வுகளை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?
2017-ல் டெட் தேர்வெழுதி ஆசிரியர் பணிக்குத் தேர்வு பெற்றவர்கள் பணி நியமன ஆணைக்கு காத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித்தேர்வு எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், டெட் தேர்வில் தேர்வான அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைதர வேண்டும் என்று வலியுறுத்தினர். கிராம சபைக் கூட்டங்களில் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2017-ல் தேர்வெழுதியவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை தரப்படும்: என்றும் உறுதியளித்திருந் தார். எனவே, திமுக தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் தரப்பட்டபடி, அரசாணை 149-ஐ நீக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். இவ்வாறு அண்ணா மலை வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago