சென்னை: 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், திமுக மீது தமிழக மக்கள் மிகப் பெரிய ஆதங்கத்திலும், கோபத்திலும் உள்ளனர். அந்த கோபத்தை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்த தயாராக இருக்கின்றனர்' என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய சென்னை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக திமுகவினர் கூறினாராகள். ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், ஆயிரம் ரூபாய் குறித்து இன்றைக்கு வரை திமுகவினர் வாயே திறப்பது இல்லை.
தேர்தல் வாக்குறுதிகளை திமுகவினர் நிறைவேற்றவில்லை என்று தமிழக மக்களிடையே மிகப்பெரிய ஆதங்கமும், கோபமும் இருக்கிறது. அந்தக் கோபத்தை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெளிப்படுத்த மக்கள் தயாராக இருக்கிறார்கள். திமுகவுக்கு ஒரு மிகப் பெரிய தோல்வியை கொடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago