மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க மானிய விலையில் மின் சாரம் வழங்க வேண்டுமென்று தமி ழக அரசிடம் மெட்ரோ ரயில் அதி காரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னையில் இரு வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ தூரத் துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் கட்டமாக ஆலந்தூர் கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்சேவை இயங்கி வருகிறது. சென்னையில் ஏற்பட்ட கனமழைக்கு பிறகு மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. தினசரி அதில் பயணம் செய்பவர்களின் எண் ணிக்கை 7 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயிலின் கட்டணத்தை குறைக்கவேண்டும் என்பது பயணிகளின் வேண்டு கோளாக உள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு தினமும் செலவிடும் தொகையில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கட்டண வசூல் மூலம் பெறமுடிகிறது. ரயில்கள் இயக்கம், ஏசி, லிப்ட், ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்களை இயக்குவது ஆகியவற்றுக்கான மின்சார செலவு அதிகமாக உள்ளது. இதுதவிர ஊழியர்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கும் அதிகம் செலவாகிறது.
அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரையிலும், பரங்கி மலைக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படும். இதேபோல், மற்ற வழித்தடங்களிலும் படிப்படியாக மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். அதே நேரத் தில் மெட்ரோ ரயிகளில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகிறார்கள். எனவே, மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க எங்களுக்கு மின்சாரத்தை மானிய விலை யில் வழங்கவேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தியுள் ளோம். அரசு தரப்பில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago