அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

By செய்திப்பிரிவு

குன்றத்தூர்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் நேற்று முன்தினம் இரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலரும், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசனின் தாயார் ராசாமணி அம்மாள்(83). வயது மூப்பு காரணமாக இவருக்கு கடந்தசில நாட்கள் முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து இவரை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இரவு 10 மணி அளவில் இவரது உயிர் பிரிந்தது.

இவர் முன்னாள் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தா.மோகலிங்கத்தின் மனைவி. இவருக்கு தற்போது அமைச்சராக உள்ள தா.மோ.அன்பரசன், தா.மோ.எழிலசன் ஆகிய 2 மகன்களும், கனிமொழி, பவானி, கண்மணி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

இவரது உடல் குன்றத்தூரில் உள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராசாமணி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பெரும்புதூர் மக்களவைஉறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர்உதயநிதி, தலைமைச் செயலர்வெ.இறையன்பு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்