சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களை நேரிடையாக சந்திக்க முடியாமல், முதல்வர் காணொலி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. நகர் 6-வது மண்டலத்தில் உள்ள 71 மற்றும் 72-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: திமுக வாக்கு சேகரிப்பில் மக்களிடையே ஆதரவு இல்லை. மாறாக, அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது.
மேலும், சட்டப்பேரவை தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. காஸ் மானியம், பெண்களுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் என்ன ஆனது என தெரியவில்லை.
இவற்றையெல்லாம் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் மக்களை நேரிடையாக சந்திக்க முடியாத முதல்வர், காணொலி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பள்ளிக் கூடத்தை திறந்துள்ள தமிழக அரசு, மக்கள் கேள்வி கேட்பார்கள் என கருதி கிராமசபை கூட்டத்தை நடத்தவில்லை. குரங்கு கையில் சிக்கியதுபோல காவல்துறையினர் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. கருத்து மோதல்கள் இருக்கலாம். ஆனால், வன்முறை கலாச்சாரம் இருக்கக் கூடாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago