புதுவையில் மீண்டும் விமான சேவை: விமான நிலைய இயக்குநர் ஆளுநருடன் ஆலோசனை

By செய்திப்பிரிவு

ஆளுநர் தமிழிசையை புதுச்சேரி விமான நிலையத்தின் இயக்குநர் விஜய உபாத்தியாய் ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது கரோனா பெருந்தொற்றுக் காலத் தில் நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. புதுச்சேரியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விமான சேவையை தொடங்குவதற்கான உதவிகளை செய்ய மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி அளித்திருப்பதை துணைநிலை ஆளுநர் விமான நிலையத் தின் இயக்குநரிடம் எடுத்துக் கூறினார்.

இதேபோல் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ், துணைநிலை ஆளுநர் தமிழிசையை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். எதிர்வரும் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

மேலும், ஆளுநர் தமிழி சையை சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ராமலு ஆகியோர் ஆளுநர் மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசினர்.

அப்போது புதுச்சேரியில் கருவுற்ற பெண்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கில் கருவுற்ற பெண்களுக்கு சுகாதார- மகப்பேறு தொகுப்பு வழங்குவது குறித்து துணைநிலை ஆளுநர் ஆலோசித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்