திமுகவில் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் செல்வந்தர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது என அதிமுக இணைஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கள் அறிமுகக் கூட்டம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனி வாசன் தலைமையில் திண்டுக் கல்லில் நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவ நாதன் முன்னிலை வகித்தார்.
வேட்பாளர்களை அறிமுகப் படுத்தி அதிமுக இணை ஒருங்கி ணைப்பாளர் கே.பழனிசாமி பேசி யதாவது:
திமுகவில் தொண்டர்கள் யாரும் முதல்வராக வர முடியாது. ஆனால், அதிமுகவில் யாராக இருந்தாலும் முதல்வராகலாம் என்பதற்கு சாட்சியாக நானே இருக்கிறேன். தற்போது தமிழகம் முழுவதும் திமுக அரசியல் வியா பாரம் செய்கிறது.
அந்தந்த பகுதிகளில் கட்சிக்காக உழைத்த திமுக பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் செல்வந்தர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தற்போது திமுக அமைச்சர வையில் உள்ள 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்தவர்கள்தான். அதிமுகவினர் இல்லாமல் திமு கவினால் ஆட்சி செய்ய முடியாது. திமுகவில் ஆளில்லை என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago