சென்னை: இலங்கை கடற்படையினரால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் 9 பேர்நாடு திரும்பினர். அவர்கள் சொந்தஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர்.
ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த ஆண்டு டிச.18-ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாளும் பல மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 நாட்களில் 56 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை மீட்க மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தன. இதைத் தொடர்ந்து, தமிழகமீனவர்கள் 56 பேரையும் இலங்கைநீதிமன்றம் கடந்த மாதம் விடுதலைசெய்தது. அவர்கள், இலங்கையில்உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பல மீனவர்களுக்கு கரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால், அவர்களை உடனே இந்தியாவுக்கு அனுப்ப முடியாதசூழல் ஏற்பட்டது. அவர்களுக்கு இலங்கையிலேயே சிகிச்சைஅளிக்கப்பட்டது. அவர்களுடன்தொடர்பில் இருந்த மற்ற மீனவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததை தொடர்ந்து, கரோனா பாதிப்பு இல்லாத ராமேசுவரம் மீனவர்கள் மரிய ஸ்மைல்சன், சங்கர்,சக்திவேல், மலையன், எட்வர்டு ஹென்றி, ஜெயகணேஷ், புதுக்கோட்டை மீனவர்கள் சந்தோஷ், பிரதீப், வீரபாண்டியன் ஆகிய 9 மீனவர்கள் விமானம் மூலம்நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சென்னை வந்தடைந்தனர். பாஸ்போர்ட் இல்லாததால் இந்திய தூதரகம் அவர்களுக்கு எமர்ஜென்சி சான்றிதழ் வழங்கி அனுப்பி வைத்தது.
நாடு திரும்பிய மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், 9 மீனவர்களும் தனி வேன்களில் சொந்தஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். மற்ற 47 மீனவர்களுக்கும் கரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிய பிறகு, படிப்படியாக தமிழகம் அழைத்து வரப்படு வார்கள் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago