சென்னை: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரிய மனு மீதான நடவடிக்கையை தொடர வேண்டாம் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ’உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள், யார் மூலமாவது யார் காலையாவது பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர்’ என்று பேசினார்.இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் நிராகரித்துவிட்டார்.
ஆட்சி மாற்றத்துக்கு, முந்தைய உத்தரவை ரத்து செய்து, அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென, புதிய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரிடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து முந்தைய உத்தரவை திரும்பப் பெற்ற தற்போதைய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மீண்டும் விசாரணை நடைமுறையை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை திரும்பப் பெற்றதை எதிர்த்து குருமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குருமூர்த்தி தரப்பில், ஏற்கெனவே அனுமதி மறுக்கப்பட்ட விண்ணப்பம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. துரைசாமி திமுகவுக்கு ஆதரவானவர் என்பதால் முந்தைய தலைமை வழக்கறிஞரின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, தனக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
» கும்பம், மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! பிப்ரவரி 10 முதல் 16ம் தேதி வரை
இதையடுத்து குருமூர்த்தி மனுவுக்கு பதிலளிக்கும்படி, வழக்கறிஞர் எஸ். துரைசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago