சென்னை: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்னாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசும்போது, “பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கும். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் யார் உண்மையான குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதில் பாஜக கட்சி உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது.
ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்து 8 மாதம் காலத்தில் வன்முறை அதிகரித்துவிட்டது. இதற்கு எடுத்துகாட்டாகத்தான் பாரதிய ஜனதா அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக பார்க்கிறோம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பாஜக தீவிரமாக பிரச்சராம் செய்து வருகிறது. பாஜக கட்சி மிக பெரிய மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வரும். ” என்று தெரிவித்தார்.
» இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் மனிதநேயமற்ற செயல்: ஓ.பன்னீர்செல்வம்
» புதிய கல்வி கொள்கை; மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்க வலியுறுத்தப்படுகிறது: தமிழிசை
நேற்று நள்ளிரவு தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக வினோத் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago