சென்னை: தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் ரூ.336 கோடியில் 114 புதிய பாலங்கள் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் இந்த பாலங்கள் கட்டப்பட உள்ளன.
கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது நபார்டு வங்கி நிதியுதவியுடன் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்ப தாவது:
நபார்டு வங்கியின் கிராமப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்கீழ், 106 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள 198 கி.மீ. சாலையில், 121 பாலங்கள் கட்ட ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அரசுக்கு பரிந்துரை அளித்தார். இது தொடர்பாக, தமிழக நிதித்துறை, நபார்டு வங்கிக்கு கருத்துரு அனுப்பியது. ஆனால், 2020-21 நிதியாண்டில் இந்த திட்டம் எடுக்கப்பட வில்லை.
இந்நிலையில், நபார்டு வங்கி தனது கிராமப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து 121 பாலங்கள் கட்டுவதற்கு ரூ.229 கோடியே 96 லட்சம் நிதியை ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கியது. ஆனால், 121 பாலங்கள் கட்ட ரூ.287.45 கோடி தேவைப்படுவதாக கூறி, கட்டுமானத்துக்கான திருத் திய மதிப்பீட்டை கடந்த ஆண்டு அக்டோபரில் நபார்டு வங்கிக்கு ஊரக வளர்ச்சித் துறை அனுப் பியது. அதில் ரூ.10.46 கோடி மதிப்பிலான 7 பாலங்கள் கட்டும் பணி கைவிடப்படுவதாகவும், மீத முள்ள 114 பாலங்களுக்கு ரூ.276.98 கோடி ஒதுக்கும்படியும் கோரியது.
அதன்பிறகு, கட்டுமானத்துக் கான தொகை ரூ.59.72 கோடி அளவுக்கு உயர்ந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி, 114 பாலங்களுக்கும் ரூ.336.70 கோடி ஒதுக்கும்படி ஊரக வளர்ச்சித் துறை கோரியது. இதைத் தொடர்ந்து, 114 பாலங்களையும் கட்டி முடிக்க, ரூ.336.70 கோடியை ஒதுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அர சுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரின் கருத்துருவை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, 114 பாலங்கள் கட்டுவதற்கு ரூ.336 கோடியே 70 லட்சத்து 62 ஆயிரம் நிதியை ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாலங்கள் கட்டும் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தரமான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படு வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
பாலங்களின் அமைவிடம்
இந்த 114 பாலங்களும் கட்டப் பட உள்ள இடங்கள் வருமாறு: அரியலூர் மாவட்டத்தில் அரிய லூர், திருமானூர், ஜெயங்கொண் டம்-2 என 4 பாலங்களும், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு-3, கரிமங்கலம்-3, அரூர்-2 என 8 பாலங்களும் கட்டப்பட உள்ளன.
மேலும், கோவை மாவட்டத்தில் ஆனைமலை, கடலூர் மாவட்டத் தில் மேல்புவனகிரி, காட்டுமன் னார்கோவில், விருத்தாசலம், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, சாணார்பட்டி-2, வேடசந்தூர்-2, குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை-2, தொப்பம்பட்டி என மொத்தம் 10, ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம்-2, அம்மாபேட்டை, கோபிசெட்டி பாளையம், நம்பியூர் என மொத்தம் 5, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர்-2 என 4 பாலங்கள், காஞ்சிபுரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்தூர்-2, மதுராந்தகம் என 3 பாலங்கள் கட்டப்பட உள்ளன.
கரூர் மாவட்டத்தில் கிருஷ்ண ராயபுரம்-2, தோகைமலை என 3 இடங்கள், கிருஷ்ணகிரி மாவட் டத்தில் தளி-2, ஊத்தங்கரை, ஒசூர் என மொத்தம் 4, மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் 2, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளை யம்-2, கொல்லிமலை, நாமகிரி பேட்டை என 4 பாலங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை-3, ஆலத்தூர் என 5 பாலங்கள், புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதியில் ஒரு பாலம், சேலத்தில் பி.என்.பாளையம்-3, வீரபாண்டி, கெங்கவல்லி-2, ஆத்தூர், கொளத்தூர், வேலபாடி, கொங்கணாபுரம் என 10 பாலங்கள், சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை-2, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர்-3, தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடிநாயக்கனூரில் தலா 1, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, உடன்குடி, புதூர்-2, ஓட்டப்பிடாரம்-2, கோவில்பட்டி, வைகுண்டம் என 8 பாலங்கள் கட்டப்பட உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் மருங்காபுரி, தா.பேட்டை, துறையூர், உப் பிலியாபுரம், மண்ணச்சநல்லூர், வையம்பட்டி-3 என 8 பாலங்கள், திருநெல்வேலியில் நாங்குநேரி-2, களக்காடு என 3 இடத்தில் பாலங்கள், தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தில் ஒரு பாலம், திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்த மல்லி, திருவள்ளூரில் தலா 1, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரணமல்லூர், செங்கம், போளூர்-2 என 4 பாலங்கள், வேலூரில் குடியாத்தம், கே.வி.குப்பம், ராணிப்பேட்டையில் திமிரி-2, திருப்பத்தூரில் திருப்பத் தூர், கந்திலி, ஆலங்காயம்-2 என 4 பாலங்கள், விழுப்புரத் தில் கண்டமங்கலம் 2, மயிலம் என 3 பாலங்கள், கள்ளக்குறிச்சி யில் கல்வராயன் மலை, உளுந் தூர்பேட்டையில் தலா 1 பாலங்கள், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 1 என மொத்தம் 114 பாலங்கள் கட்டப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago