மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை யால் 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச் சாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி தேர்தல் மற்றும் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் போட்டி யிடும் பாஜக வேட்பாளர்கள் அறி முகக் கூட்டம், பழங்காநத்தம் பகுதியில் நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
இதில் வேட்பாளர்களை அறி முகம் செய்து மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
மதுரையில் 100 வார்டுகளிலும் போட்டியிடும் பாஜகவினர் வென் றால் மக்களின் முதன்மை சேவ கர்களாக இருப்பார்கள். இஸ் லாமியர், கிறிஸ்தவர் மற்றும் மூன் றாம் பாலினத்தவர்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தரமற்ற பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு அறிவித்துள்ளது ஏமாற்று வேலை. ரூ.25-க்கு கரும்பு வாங்கி ரூ.40-க்கு விற்று ரூ.33 கோடி கமிஷன் பெற்றுள்ளனர். பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்கான மஞ்சள் பையை ரூ.60-க்கு வாங்கி உள்ளனர்.
மதுரை அமைச்சர் குவாரி, கிரஷர் மூலம் கொள்ளை அடிக் கிறார். மதுரை எம்பி மத்திய அரசுடன் சண்டை போடுவதால், மது ரைக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் வராமல் போகும் நிலை உள்ளது. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையால் 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸும்தான். இப்போது அதை அவர்கள் எதிர்ப் பது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மதுரையில் எலக்ட்ரானிக் சிட்டி அமைப்பது உட்பட 35 வாக் குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டார். கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, மாநில பொதுச் செயலர் னிவாசன், புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்கபெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சசிராமன், ராஜரத்தினம், ஊடகப்பிரிவு தலை வர் தங்கவேல்சாமி, ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
பாஜக சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட் பாளர்கள் அறிமுகக் கூட்டம் சிவகாசியிலும் அதைத் தொடர்ந்து விருதுநகரிலும் நடைபெற்றது.
அங்கு அண்ணாமலை பேசு கையில், கரோனா காலத்தில் 165 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கி மக்களை கரோனாவிலிருந்து பிரதமர் மோடி காப்பாற்றியுள்ளார் என்றார்.
கூட்டத்தில், மாவட்டத் தலைவர் கஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், கட்சி யின் தேர்தல் பார்வையாளர் பார்த் தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago