சென்னை: பேரவைக்கு அனுப்பிய கடிதத்தை பொது வெளியில் தெரிவித்தது ஜனநாயகமா என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து,மீண்டும் மசோதாவை நிறைவேற்றுவற்கான சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது:
நீட் விலக்கு மசோதா கடந்தஆண்டு செப்.13-ம் தேதி முதல்வரால் முன்மொழியப்பட்டு, அன்றே ஒருமனதாக நிறைவேற்றி, உடனே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரிடம் இருந்து கடந்த 1-ம் தேதி ஒரு நேர்முகக் கடிதம் எனக்குவந்தது. தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து செய்தியும் வெளியானது. இதுதொடர்பாக, கடந்த 5-ம் தேதி முதல்வர் தலைமையில் நடந்தசட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டிமீண்டும் மசோதாவை நிறைவேற்றிஅனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
ஆளுநர் எனக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:
ஊகங்களின் அடிப்படையில்..
தமிழக சட்ட மசோதா, அதனுடன் அளிக்கப்பட்ட உயர்நிலை குழுவின் அறிக்கை மற்றும் இதரஆவணங்களை கவனமாக பரிசீலித்தேன். உயர்நிலை குழுவின் அறிக்கையே மசோதாவின் அடிப்படை என்பது தெளிவாகிறது. அந்த அறிக்கை எந்த வகையிலும் ஏற்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் இந்தஅறிக்கையானது, ‘நீட் தேர்வு நோக்கம் அற்றது. தகுதிக்கு எதிரானது. ஒப்பீட்டு அளவில் குறைந்தசெயல்திறன் கொண்ட மாணவர்களை எம்பிபிஎஸ் சேர வழிவகுக்கிறது. இத்தேர்வால் திறன் குறைந்த, சமுதாயத்தில் முன்னேறிய, பணம் படைத்தவர்கள் மருத்துவத் துறையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தவழிவகை செய்கிறது’ என்று ஆதாரமற்ற, மிகைப்படுத்தப்பட்ட ஊகங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் தேர்வுகளுக்கு மட்டுமே நீட் தேர்வு முக்கியத்துவம் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முந்தைய ஆண்டுகளில் 30-38 சதவீதத்துக்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏழைக் குழந்தைகள் அதிகம் படிக்கும் அரசுப் பள்ளிகளின் வருந்தத்தக்க நிலையையே காட்டுகிறது.
‘காமாலைக்கண்’ பார்வை
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது; வசதி படைத்தவர்களுக்கு சாதகமானது என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. அதேநேரம், தனியார் பயிற்சி மையங்கள் அளிக்கும் சிறப்பு பயிற்சிகளால் மாநில பொதுத் தேர்வுகளிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மாறுபடுவதை குழு கருத்தில் கொள்ளவில்லை. உயர்நிலை குழுவின் ‘காமாலைக்கண்’ கொண்ட ஒருதலைபட்ச பார்வையை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.
அரசியலமைப்பு சட்ட விதிகளை ஒட்டியே நீட் தேர்வு அமைந்துள்ளது என்பதை தனித்து குறிப்பிட அவசியம் இல்லை. இது சமூக நீதியை காக்கவே வழிவகை செய்கிறது. தேசிய நலனுக்காகவும், நலிந்த பிரிவினரை காக்கவும் நீட் தேர்வு அவசியம் தேவை என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், நாடு முழுவதற்கும் பொதுவானதாகவும், கட்டாயமாக்கப்பட்டதுமான நீட் தேர்வுக்கு மாநிலஅரசு விலக்கு கேட்பது சரியா? இவற்றின் அடிப்படையில், இந்த சட்ட மசோதா தமிழக மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்று நான் கருதுவதால், இதை அவையின் மறு பரிசீலனைக்கு திருப்பி அனுப்புகிறேன்.
இவ்வாறு அதில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எனக்கு வந்த கடிதத்தை பேரவை செயலரிடம் கொடுத்து மிக ரகசியமாக உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. வேறு யாருக்கும் இதுபற்றி தெரியாத நிலையில், பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பொது வெளியில் தெரிவித்து, விவாதம், விமர்சனம், போராட்டத்துக்கு வித்திட்டது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதா என்பதை உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago