பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்கு: விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அதிகாரிகளுக்கு விலக்கு அளித்து உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிப்பது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் குடியிருப்பு வாசிகள் தொடர்ந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் பெத்தேல் நகரில் உள்ள மாணவர்களின் படிப்பு, தேர்வுகளை கருத்தில்கொண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கான மின் இணைப்பை இந்த கல்வியாண்டு முடியும்வரை துண்டிக்க வேண்டாம் என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான விவரங்களை அரசு தலைமை வழக்கறிஞரிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்குகள் இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில், பெத்தேல் நகரில் நீண்டகாலமாக வசித்து வரும் நபர்களின் பெயர், நிலத்தின் பரப்பு, சர்வே எண், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அடங்கிய விவரங்கள் தங்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த விவரங்களை தொகுத்து நேரடி ஆக்கிரமிப்பாளரா அல்லது ஏற்கெனவே ஆக்கிரமித்த நபர்களிடம் விலைக்கு வாங்கியவர்களா என்ற விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்திடம் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

அப்போது அரசு தரப்பில், அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரிகள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், அதிகாரிகள் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டனர். மேலும், சீல் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்களின் உள்ளே உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கக்கோரி விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அதை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்