சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், திருப்பூர் மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் கால்நடை மருத்துவம்மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்), உணவு, கோழியினம், பால்வள தொழில்நுட்பப் படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இவற்றுக்கான பொதுப் பிரிவு தரவரிசைப் பட்டியல் கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின்படி அரசுப் பள்ளிமாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 2,719 பேர் இடம்பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவி எம்.பிரியா (கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 193.430) முதலிடம் பிடித்துள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த பி.பவித்ரா (193.395) 2-ம் இடத்தையும், நாமக்கல்லைச் சேர்ந்த ஜே.எஸ்.தீபகுமார் (192.995) 3-ம்மூன்றாம் இடத்தையும், எஸ்.கனிதாரன் (192.570) 4-ம் இடத்தையும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவி ஆர்.சுவேதா (192.195) 5-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தரவரிசைப் பட்டியலை www.tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். நேரடி மற்றும்ஆன்லைன் கலந்தாய்வு குறித்தஅறிவிப்பு விரைவில் இணைய தளங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago