முன்னாள் மாணவர்களின் நிதியுதவியால் சென்னை ஐஐடியில் பல்துறை நீர் மேலாண்மை கொள்கை மையம்

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் மாணவர்கள் வழங்கிய ரூ.3 கோடி நிதியுதவியில் சென்னை ஐஐடியில் பல்துறை நீர் மேலாண்மை கொள்கை மையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை ஐஐடி-யில் பல்துறை நீர் மேலாண்மை கொள்கை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐஐடி முன்னாள் மாணவர்கள் டி.பரசுராம் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணன் நாராயணன் ஆகியோர் வழங்கிய ரூ.3 கோடி நிதியில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தொடர்பாக எழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வு காணும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள், புதிய சாதனங்கள் இந்த மையம் மூலம் உருவாக்கப்படும்.

இந்த மையம் தொடர்பாக ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உறவுகள்) மகேஷ் பஞ்சாநுல்லா கூறியதாவது:

நீர் மேலாண்மை தொடர்பான திட்டத்துக்கு தாராளமாக நிதியுதவி அளித்த முன்னாள் மாணவர்களுக்கு நன்றி. முன்னாள் மாணவர்களின் ஆதரவுடன் புதுப்பது திட்டங்களை உருவாக்கி, அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் புதுமையான திட்டம் இது.

இவ்வாறு மகேஷ் பஞ்சாநுல்லா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்