திருவள்ளூர் திமுக பொறுப்பாளர் மனைவி போட்டியின்றி தேர்வு: அதிமுக வேட்பாளரை கடத்தி மிரட்டியதாகக் கூறி அதிமுகவினர் திருத்தணியில் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

திருத்தணி: திருத்தணி நகராட்சியின் 18-வது வார்டு உறுப்பினராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மனைவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும், அதிமுக வேட்பாளரை கடத்தி, வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்ததாக கூறி அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில், 18-வது வார்டுஉறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மனைவி சரஸ்வதி, அதிமுக சார்பில், வாணி என இருவர் மட்டுமே மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நேற்று அதிமுக வேட்பாளரான வாணி, “என் கணவருக்கு உடல் நிலைசரியில்லாததால், போட்டியிட விரும்பவில்லை. ஆகவே, என் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு, நகராட்சி அலுவலகம் செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும்” என திருவள்ளூர் எஸ்.பி.வருண்குமாரிடம் கோரிக்கை வைத்தார்.

அதனடிப்படையில், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வாணி, தன் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, திமுக வேட்பாளர் சரஸ்வதி, 18-வது வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே, மாவட்ட திமுக பொறுப்பாளர் பூபதியின் தூண்டுதலின் பேரில், திமுகவினர் வாணியைக் கடத்தி, அவரின் வேட்புமனுவை வாபஸ் பெற செய்துள்ளதாகக் கூறி, நேற்று மதியம் அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, திருவள்ளூர் மேற்கு மாவட்டஅதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. வி. ரமணா, முன்னாள் எம்பி கோ.அரி,திருத்தணி நகர அதிமுக செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் மாவட்ட திமுக பொறுப்பாளர் பூபதிக்கு எதிராக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், திருத்தணி டி.எஸ்.பி. ஆகியோரிடம் புகார் அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்