புதுச்சேரி: புதுவை திலாசுப்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலில் குருபூஜை விழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு நடந்தது. 7.30 மணிக்கு தமிழில் வேள்வி வழிபாடு, 9 மணிக்கு வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடந்தது. பின்னர் அபிஷேகம், திருக்குட நன்னீராட்டு, திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, எம்எல்ஏ ஆறு முகம் மற்றும் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சாமிகள் கோயிலில் 22-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணி முதல் ஞான விநாயகர், ஞான முருகர், சற்குரு அப்பா பைத்தியம் சாமிகளுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னமளிப்பு விழா நடந்தது.
குருபூஜை விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், அவரது மனைவி வசந்தி, காரைக்கால் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ திருமுருகன், அதிமுக கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago