காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், கானாடு காத்தான் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் 8-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்) பிரிவுக்கு ஒதுக்கப் பட்டது. ஆனால் அந்த வார்டில் ஆதிதிராவிடர் ஒருவர் கூட வசிக்கவில்லை. தவறாக வார்டு ஒதுக்கீடு செய்த அதிகாரிகளின் நட வடிக்கையை கண்டித்து அப்பகுதியில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக மக்கள் அறிவித்தனர்.
இதனால் அந்த வார்டில் திமுக, அதிமுக கூட்டணி கட்சியினர் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் 8-வது வார்டை சேர்ந்த ஒருவரின் முன்மொழிவோடு 9-வது வார்டை சேர்ந்த காளியப்பன் மனைவி மாரி (30) என்பவர் மட்டும் சுயேச்சையாக வேட்பு மனு செய்தார். இந்நிலையில் அவர் நேற்று வேட்புமனுவை வாபஸ் வாங்க வந்தார். ஆனால் தேர்தல் அதிகாரிகள் மனுவை வாபஸ் பெற அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாரி தனது மனுவை வாபஸ் வாங்க அனுமதித்தனர்.
இதனால் இங்கு தேர்தல் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago