சிவகாசி: பொய் வழக்குகளைக் கண்டு அதிமுகவினர் பயப்படமாட்டார்கள் என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசினார்.
சிவகாசி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக மற்றும் வாக்கு சேகரிப்புக் கூட்டம் சிவகாசியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பொங்கல் திருநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொங்கல் பரிசாக நூறு ரூபாய் கொடுத்தார். பிறகு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கினோம். கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.2,500 வழங்கினோம். கரும்பு, அரிசி, வெல்லம், பருப்பு எல்லாமே தரமாக வழங்கப்பட்டன.
நாங்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 கொடுத்த போது ரூ.5 ஆயிரம் கொடுக்கச் சொன்னவர்தான் ஸ்டாலின். ஆனால் இன்று பொங்கல் பரிசுடன் 100 ரூபாய் கூட கொடுக்காத முதல்வர்தான் ஸ்டாலின். பொங் கல் பரிசுத் தொகுப்புகளும் தரமற்ற வையாக கொடுக்கப்பட்டன. 21 பொருட்கள் வழங்குவோம் என்று கூறினர். ஆனால் 18 பொருட்கள்தான் வழங்கினர்.
தரமற்ற பரிசுத் தொகுப்பு குறித்து திருத்தணியை சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவித்தார். இதனால் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது மகன் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு தரமற்ற பொருள் என்று சொல்ல ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்காக ஜாமீனில் வரமுடியாத வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு உயிரை பலி வாங்கிய அரசாங்கம்தான் ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு. இந்த அரசு ஒரு சர்வாதிகார ஆட்சியாக நடக்கிறது.
அதிமுகவை அழிக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று எங்கள் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அரசு வேலை வாங்கித் தருவதற்கு ரூபாய் வாங்கியதாக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இவ்வாறு அச்சுறுத்தி தேர்தல் பணி செய்ய விடாமல் திமுக அரசு தடுக்கிறது. எத்தனை பொய் யான வழக்குகளைப் போட்டாலும், மிரட்டினாலும் அத்தனையும் தவிடு பொடியாக்கி இத்தேர்தலில் அதிமுகவினர் வெற்றி பெறுவர். பொய்யான வழக்குகளைக் கண்டு அதிமுகவினர் பயப்பட மாட் டார்கள்.
கடந்த 8 மாதங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறித்தான் வந்தார்கள். ஆனால், அதற்கான முயற்சியை திமுக அரசு எந்த வகையிலும் மேற்கொள்ளவில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது திமுக. இப்போது வரை நீட் தேர்வு ரத்து என்னாச்சு என்பதை பொதுமக்கள் கேட்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் ராஜ்சத்யன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago