சிவசங்கர் பாபாவுக்கு சிகிச்சை: சகோதரி மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சிவசங்கர் பாபாவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை கோரியும், சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரியும் சிவசங்கரனின் சகோதரி தாக்கல் செய்த வழக்கில் காவல்துறையும், சிறைத்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கடந்த அண்டு ஜூன் 16ஆம் தேதி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர்பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்படும் தனது சகோதரருக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது தற்போதைய உடல்நிலை குறித்து தனக்கு அறிக்கை அளிக்கும் படியும், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரியும் சிபிசிஐடி காவல்துறையிடமும், புழல் சிறை நிர்வாகத்திடமும் ஜனவரி 23ஆம் தேதி மனு அளித்தும் கருத்தில் கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமென ஜெயலட்சுமி மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து காவல்துறையும், சிறைத்துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்