வண்டலூர்: நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் 177 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதில் 9-வது வார்டில் பாலமுருகன் (சுயே), குமார் (பாமக), தேன்மொழி, கார்த்திக் (திமுக), பாலாஜி (அதிமுக) ஆகிய 5 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில், தேன்மொழி திமுக வேட்பாளரின் மாற்று வேட்பாளர் என்பதால் மனுவை திரும்பப் பெற்று கொண்டார். அதிமுக, சுயேச்சை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பாமக வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தார்.
இதையடுத்து கார்த்திக் போட்டியின்றி தேர்வாகிறார். திமுக சார்பில் தலைவர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டவர், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலும் சிலர் வாபஸ் பெறக்கூடும் என்ற பேச்சும் எழுந்திருப்பதால், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கெனவே கார்த்திக்கின் தந்தை எம்.கே. தண்டபாணி, 4 முறை நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சித் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தந்தை இறந்த பிறகு, முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இவர் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியின் முதல்தலைவராக வரவும் வாய்ப்புள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.
மனுக்கள் வாபஸ் பெறப்படுவது நிறைவடைந்தவுடன், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது, கார்த்திக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago