வார விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
கொடைக்கானலில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப் பாடுகள் காரணமாக மலர்க் கண்காட்சி, கோடை விழா ஆகியவை நடத்தப்படவில்லை. மேலும் கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவும் இல்லை.
கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பிறகு வார விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் காணப்படுகிறது.
பிரையண்ட் பூங்கா, மோயர் பாய்ண்ட், தூண் பாறை, பைன் பாரஸ்ட், குணா குகை, ரோஸ் கார்டன் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கடந்த 2 நாட்களாகக் காணப்பட்டனர். ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் அவர்களை நம்பி உள்ள சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானலில் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சி யஸாகவும், இரவில் 16 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.
இதனால் மாலை முதல் அதிகாலை வரை குளிர் நிலவு கிறது.
இதமான தட்ப வெப்ப நிலை யுடன் இயற்கை எழில் காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித் தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago