லதா மங்கேஷ்கர் மறைவு: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92.

சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

லதா மங்கேஷ்கரில் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா, விளையாட்டு என பல்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீன்வளம், கால்நடை, தகவல் ஒலிபரப்புத் துறை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகி, இசைக்குயில் #பாரதரத்னா லதா மங்கேஷ்கர் உடல் நலமின்மையால் காலமான செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!!!" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்