நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரம் செய்கிறார்.
இதுதொடர்பாக பாஜக உள்ளாட்சி தேர்தல் மாநில குழு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிப்.6 (இன்று) முதல் 9-ம் தேதி வரை முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதன்படி, 6-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் பிரச்சாரத்தில் பங்கேற்கிறார். 7-ம் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் பிரச்சாரம் செய்கிறார். 8-ம் தேதி நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலியிலும், 9-ம் தேதி கோவில்பட்டி, சிவகாசி விருதுநகர், மதுரையிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago