சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
வரும் 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமாக ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். 'உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி' என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்று திமுகவின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 7-ம் தேதி சேலம் மாவட்டத்திலும், 8-ம் தேதி கடலூர் மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இதேபோல் 9-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலும், 10-ம் தேதி ஈரோடு மாவட்டத்திலும், 11-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும், 12-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். 13-ம் தேதி திண்டுக்கல், 14ம் தேதி மதுரை, 15-ம் தேதி தஞ்சை, 17-ம் தேதி நெல்லை என அடுத்தடுத்து அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago