கருணாநிதி பாணியில் ஸ்டாலின்

By கல்யாணசுந்தரம்

கடந்த பல ஆண்டுகளாகவே, எந்த இடத்தில் பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சார கூட்டம், மாநாடு நடைபெற்றாலும், அங்கு கருணாநிதி பேசும்போது, அந்த மாவட்டம் அல்லது பகுதி யின் திராவிட இயக்க நிர் வாகிகள், கட்சியின் மூத்த நிர் வாகிகள் ஆகியோருடன் தான் கொண்டிருந்த நட்பு, அந்தகாலத் தில் அங்கு நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் அவர்க ளுடனான அனுபவங்களை கூறித் தான் தனது பேச்சையே தொடங் குவார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவைகளை குறிப்பிட்டுப் பேசும் கருணாநிதியின் இந்த அணுகுமுறையை கட்சி நிர் வாகிகள் மற்றும் தொண்டர் கள் வெகுவாக ரசிப்பார்கள். கரு ணாநிதியின் இந்த அணுகு முறையை அவரது மகனும், திமுகவின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தற்போது தனது பிரச்சார நிகழ்ச்சிகளில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

குறிப்பாக கரூர் மாவட்டம், குளித்தலையில் நேற்று நடை பெற்ற பிரச்சாரப் பொதுக்கூட் டத்தில் பேசிய ஸ்டாலின், தனது பேச்சின் இடையே, தான் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தின் ஒரு கட்டமாக கரூர் மாவட்டத்துக்கு வந்தபோது யார் வீட்டில் சாப்பிட்டேன், யார் வீட்டில் ஓய்வெடுத்தேன், யார் யார் அருகிலிருந்தார்கள் என்பதையெல்லாம் வரிசையாக நினைவுபடுத்திக் கூறினார். அப்போது, மேடையில் இருந்த நிர்வாகிகள் மற்றும் கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் பலத்த கைத்தட்டல் எழுப்பி அவரது பேச்சை ரசித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்