மரம் வெட்ட சென்றவர்கள் கடத்தல் வழக்கில் கைது?: ஊர் திரும்பாததால் ஏற்காடு மக்கள் சோகம்

By செய்திப்பிரிவு

திருப்பதி மலைப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் விளைந் துள்ளன. இந்த மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள், புரோக்கர்கள் மூலம் ஏற்காடு உள் ளிட்ட பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளை வரவழைத்து, சவுக்கு மரம் வெட்டுவதற்கு என்று கூறி மரம் வெட்டும் தொழிலில் ஈடுப டுத்தி வந்தனர்.

ஏற்காடு மலையில் 64 கிராமப் பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர் கள் பெரும்பாலும் எஸ்டேட் கூலித் தொழிலாளிகள். கடந்த 3 ஆண்டுகளாக, ஏற்காட் டில் மரம் வெட்ட தடை விதிக்கப் பட்டுள்ளதால், வெளி மாவட்டங் களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய நிர்ப்பந்தத் துக்கு உள்ளாகியுள்ளனர். இவர் களை புரோக்கர்கள் அழைத் துச் சென்று, திருப்பதியில் செம் மரம் வெட்டிக் கடத்தும் தொழி லில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மரம் வெட்டினால் கூலி கிடைக் கும் என்ற ஒரே நம்பிக்கையில், படிப் பறிவு இல்லாத கூலித் தொழிலாளிகள், அரசால் தடை செய்யப்பட்டது செம்மரம் என்பதை அறியாமலே, மரம் வெட்டி போலீஸார் பிடியில் சிக்கியுள்ளனர்.

கூத்துமுட்டல் பகுதியைச் சேர்ந்த உண்ணாமலை (30) கூறிய தாவது: எங்கள் ஊரில் இருந்து 3 பேர் மரம் வெட்ட ஆந்திரா மாநிலம் சென்று, போலீசார் பிடி யில் சிக்கிக் கொண்டனர். 8 மாதங் கள் கழித்து சமீபத்தில்தான் அவர்கள் ஊர் திரும்பியுள்ளனர். சவுக்கு மரம் வெட்டுவதற்கு என்று புரோக்கர்கள் அழைத்துச் சென்று, இந்த மரங்களை வெட்ட வைத்து போலீஸார் பிடியில் சிக்க வைத்துள்ளனர் என்றார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திர போலீஸார் அதி ரடி நடவடிக்கை எடுத்து, செம்மரக் கடத்தல் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பலரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில் ஏற்காடு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்