சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சிவகாசியில் வரும் பிப்-7ல் பிரச்சாரத்தை தொடங்குவதாக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழகத்தில் வரும் பிப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக சார்பிலும், அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வரும் பிப்.7 முதல் பிப்.15-ம் தேதி வரை பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரும் பிப்.7-ம் தேதி காலை 8.30 மணிக்கு சிவகாசியிலும், பகல் 12.30 மணிக்கு நாகர்கோவிலிலும், பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலியிலும், மாலை 5 மணிக்கு தூத்துக்குடியிலும் அதிமுக சார்பிலும், அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
இதனைத்தொடர்ந்து பிப்.8-ம் தேதி காலை 9 மணிக்கு மதுரையிலும், காலை 11.30 மணிக்கு திண்டுக்கல்லிலும், பிற்பகல் 3 மணிக்கு கரூரிலும், மாலை 5.30 மணிக்கு திருச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
» தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?
» அனைத்து பார்களையும் மூட உயர் நீதிமன்றம் தீர்ப்பு: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
இதே போல், வரும் பிப்.10-ம் தேதி, வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடியிலும், பிப்.11 வட சென்னை, தென் சென்னை, சென்னை புறநகர் பகுதிகளிலும், பிப்.14-ம் தேதியன்று கோவை, திருப்பூர், ஈரோட்டிலும், பிப்.15-ம் தேதி கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கு பிரச்சாரம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago