தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? - அறநிலையத் துறை அறிக்கை தர நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களின் மின் இணைப்பைத் துண்டிக்கவும், நியாயமான வாடகையை நிர்ணயிக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. நீதிமன்றஉத்தரவுப்படி நடவடிக்கை எடுக்காமல் ஆக்கிரமிப்பை ஊக்குவித்தது கோயில் நிர்வாகம்தான். கோயில்நிர்வாகத்தை கவனிக்க வேண்டியசெயல் அலுவலர்கள், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துச் செயல்படுகின்றனர். கடமையைசெய்வதற்குத்தான் செயல் அலுவலருக்கும், ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதேயன்றி, ஏசி அறையில் உட்கார இல்லை’’ என கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், சரியாக செயல்படாத அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்ய உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

பின்னர் திரிசூலநாதர் கோயில்நிலத்தில் உள்ள 1,640 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், செயல் அலுவலர்களின் செயல்பாட்டை அறநிலையத் துறை ஆணையர் கண்காணிக்க அறிவுறுத்தினர். மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக அவர்களை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த கோயிலில் பணிபுரிந்த செயல் அலுவலர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களில் உள்ளஆக்கிரமிப்புகளின் விவரங்களும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசார ணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்