சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர்தேர்வில் கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வு வாரியத் தலைவர் ஜி.லதா வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிப்.12-ல் தேர்வு தொடக்கம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, கணினிவழி தேர்வு பிப்.12 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த அட்ட வணையில் கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் ஆகிய 3 பாடங்களுக்கான தேர்வு இடம் பெறவில்லை.
இந்நிலையில், இந்த 3 பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, கணிதத் தேர்வு பிப். 16-ம் தேதி காலை, பிற்பகல் மற்றும் 17-ம் தேதி காலை நடை பெறுகிறது.
ஆங்கில பாடத் தேர்வு 17-ம் தேதி பிற்பகல் மற்றும் 18-ம் தேதி காலை, பிற்பகல் நடைபெறும். 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு காரண மாக அன்று தேர்வு கிடையாது. 20-ம் தேதி காலை கணினி அறிவியல் பாடத் தேர்வு நடைபெறும்.
அட்டவணை மாறுதலுக்குட்பட்டது
தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக் கப்படும். இந்த தேர்வுக்கால அட்டவணை நிர்வாக காரணங்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை யைப் பொருத்து மாறுதலுக்கு உட்பட்டது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago