நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

By செய்திப்பிரிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கியது. முதல் 3 நாட்களில் குறிப்பிடும்படியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. முக்கிய கட்சிகளின் கூட்டணிகளில் இடப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2 நாட்களாக வேட்புமனுக்கள் அதிக அளவில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2-ம் தேதி வரை 10,153 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நேற்றும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். அனைத்து பகுதிகளிலும் மனு தாக்கல் செய்வோர் கூட்டம் இன்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது. இதனிடையே, மாவட்ட ஆட்சியர் களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஊர்வலம், நடைபயணம், சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகன பேரணிகளை நடத்துவதற்கான தடை வரும் 11-ம் தேதி வரை தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE