பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

By கி.மகாராஜன்

மதுரை: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கியதற்காக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையை சேர்ந்த சிவ பாலசுப்ரமணியின், கிருஷ்ணவேணி, உள்ளிட்ட 6 பேர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சிப்பிப்பாறை ராஜம்மாள் பட்டாசு ஆலையில் 2020 மார்ச் 20-ல் நடைபெற்ற வெடி விபத்தில் எங்கள் உறவினர்கள் 6 பேர் உயிரிழந்தனர். எங்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்குவதாக அப்போதைய அரசு அறிவித்தது.

ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நிவாரணமும் தரவில்லை. எனவே, குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்காதது குறித்து கேள்வியெழுப்பிய நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த இழப்பீடு வழங்குவதற்காக உழைத்த வழக்கறிஞர்களுக்கும், இழப்பீடு வழங்கிய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. இந்த இழப்பீடு பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை சிறிதளவாவது போக்கும். வேறு நபர்கள் நிவாரணம் பெற விரும்பினால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்